Watch - இறைவனை நம் வசம் இழுப்பது எது?|What draws God closer to us?| Sri Sivaramakrishnan | Bhajan Composer - Sri Sathya Sai | Sri Sathya Sai Media Centre
இறைவனை நம் வசம் இழுப்பது எது?|What draws God closer to us?| Sri Sivaramakrishnan | Bhajan Composer
Published on June 12, 2026 12:30 PM
Conversations
நாம் மிகவும் விரும்பி கேட்கும் பிரசாந்தி மந்திர் பஜனைகளில், ‘ஓம் ஜகத் ஜனனி சாயி மாதா’, ‘கோபாலா கோபாலா ராதே நந்தலாலா’, ‘வீர தீர சூர ஹனுமான் கீ ஜெய்’ போன்ற பஜன்களை இயற்றி இசையமைத்தவர் யாரென்று தெரியுமா?
"நாக்கு ஒரு கம்பம் போன்றது. இறை நாமத்தைப் பாடுதல் ஒரு கயிறு போன்றது; அந்தக் கயிற்றைக் கொண்டு சர்வ வல்லமை படைத்த இறைவனை நமக்கு அருகில் இழுத்து வந்து கட்டிப்போடலாம்; அதன் மூலம் அவருடைய அருளை நாம் பெறலாம்." (sss VII 52) என்ற ஸ்வாமியின் திருமொழிக்கேற்ப வாழ்ந்து வருகிறார் இவர்.
தனக்கு ஆன்மிக முன்னேற்றத்தைத் தந்தது சாயி பஜனை தான் என்கிறார்.
தான் ஒரு கருவி; மேற்கூறிய பஜனைகளை இயற்றி இசையமைத்தவர் ஸ்வாமியே என்று மிகவும் அடக்கத்துடன் தனது திவ்ய அனுபவங்களை நமது ஆத்மார்த்த அனுபவங்கள் தொடரின் இப்பகுதியில் பகிர்கிறார் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்கள். நாமும் கேட்டு மகிழலாம்!